அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்! கெட்ட கெட்ட வார்த்தைகளால் அசிங்க அசிங்கமாக திட்டிய வைத்திலிங்கம் !

By sathish kFirst Published Nov 19, 2018, 9:21 PM IST
Highlights

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவந்த செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு  பொதுமக்களை அதிமுக MP  வைத்தியலிங்கம் தகாத வார்த்தைகளால் திட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவந்த செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தென்னை, பலா, வாழை உள்ளிட்ட மரங்கள் அடியோடு விழுந்ததால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக பல இடங்களில் மின்சாரம் தடை பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தங்கள் பகுதியில் நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை என்றும், அதிகாரிகள் வரவில்லை என்றும் கூறி பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, துரைக்கண்ணு ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் இருந்தார். வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு அடுத்த தெலுங்கன்குடிகாடு வழியாக அமைச்சர்கள் சென்றபோது, அவர்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

தங்களுக்கு போதிய குடிநீர், உணவு வசதிகள் கிடைக்கவில்லை என்று அவர்கள் அமைச்சர்களிடம் புகார் தெரிவித்தனர். அப்போது பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைத்திலிங்கம், தகாத வார்த்தைகளை கூறித் திட்டியதால் பரபரப்பும் ஏற்பட்டது

click me!