"தினகரன் போனால் என்ன? பன்னீர் வந்தால் என்ன?" - விசுவாசத்தை விட்டொழித்த எம்.எல்.ஏ க்கள்!

First Published Apr 17, 2017, 10:36 AM IST
Highlights
admk mlas lost faith in ops and dinakaran


சசிகலா குடும்பம் அல்லாத அதிமுகவை உருவாக்குவதற்கான பேச்சு வார்த்தையை இரு அணிகளும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பன்னீர் மற்றும் எடப்பாடி தரப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணைந்து, பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், எடப்பாடி முதல்வராகவும், பன்னீர் பொது செயலாளராகவும் இருக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் மத்திய அரசின் வருமான வரி ரைடுகள், வழக்குகள் போன்றவற்றால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக, தினகரன் கட்சியில் இருந்து விரைவில் வெளியேற்றப் படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவுக்கு எதிராக, தினகரன் ஆதரவாளர்கள் யாராவது குரல் கொடுத்தால், அவர்களும் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

அதனால் ஏற்படும் இழப்பை கொங்கு மண்டலமும், பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ க்களும் ஈடு செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏ க்களை பொறுத்தவரை, எஞ்சியுள்ள நான்காண்டு காலமும் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.

அதனால் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்பது போல, தினகரன் போனால் என்ன? பன்னீர் வந்தால் என்ன? என்ற மனநிலையிலேயே உள்ளனர்.

அதனால், பெரிய எதிர்ப்பு இன்றியே, தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பன்னீரும், எடப்பாடியும் அந்த இடத்தை கைப்பற்றி விடுவார்கள் என்பது உறுதியாகி விட்டது.

click me!