சொகுசு விடுதியில் “கரகாட்டம், குத்தாட்டம்” பார்த்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

 
Published : Feb 10, 2017, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சொகுசு விடுதியில் “கரகாட்டம், குத்தாட்டம்” பார்த்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

சுருக்கம்

சென்னை கூவத்தூரில் தனியார் சொகுசுவிடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கரகாட்டம், சினிமா, ஆட்டம், பாட்டம் என உல்லாசமாக பொழுதைக்கழித்தனர்.

தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆட்சியைக் கைப்பற்றப்போவது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியா?, அல்லது அ.தி.மு.க.பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தலைமையிலான அணியா? என்ற உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், சசிகலா ஆதரவு 6 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 130எம்.எல்.ஏ.க்களையும், கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்களை மூளைச்ச லவை செய்து,யாரேனும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு மாற்றிவிடக்கூடாது என்பதற்காக செல்போன்கள் பயன்படுத்துவதிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. யாரும் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் சொகுசுவிடுதியில் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த சூழலில், எம்.எல்.ஏ.க்களுக்கு மனதை உற்சாகமாக வைக்கும் வகையிலும், பொழுதுபோகும் வகையிலும் கலைநிகழ்ச்சிகளுக்கு அதிமுக தலைமை ஏற்பாடு செய்து இருந்தது. சொகுசுவிடுதியில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்காக நேற்று கரகாட்டம், ஆடல்,பாடல் நடத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கரகாட்டம் ஆட்டத்தை  உற்சாகமாகப் பாரத்து ரசித்தனர். 

அதன் பின், இரவு எம்.எல்.ஏ.க்கள் விருப்பப்படி அவர்களுக்கு பிடித்தமான திரைப்படம் ஒளிபரப்பட்டது என்று அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அந்த பிரமுகர் கூறுகையில், “ இந்த சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்கு எந்தவிதமான சவுகரியக் குறைபாடும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நீச்சல் குளத்தில் மிதக்கும் “மதுபார்”, மிதக்கும் உணவுவிடுதி, கடற்கரையில் விளையாடும் வசதிகள், கடற்கரையில் ஓய்வெடுக்கும் வசதிகள் என அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. செல்போன்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அப்படியே அவர்கள் யாருடனாவது பேசமுற்பட்டால், மூத்த நிர்வாகி ஒருவரின்கண்காணிப்பில் பேட அனுமதிக்கபடுகிறார்கள்.

செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டவுடன் ஒரு எம்.எல்.ஏ. கோபித்துக்கொண்டு வெளியேறினார், ஆனால், அவரை நடிகராக இருந்து எம்.எல்.ஏ ஆன ஒருவர் பேசி சமாதானம் செய்து அழைத்து வந்தார். நாள் ஒன்றுக்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதிக்கு வாடகையான ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை செலவாகிறது. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு