கண்ணீர் விட்டு அழுத அ.தி.மு.க. அமைச்சர்!... இதுதாண்டா நிஜ விவசாய பாசம்...

By manimegalai aFirst Published Nov 18, 2018, 1:43 PM IST
Highlights

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் ஓ.எஸ்.மணியன். அவர் கஜா புயல் பாதிப்பால்  தனிப்பட்ட முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் ஓ.எஸ்.மணியன். அவர் கஜா புயல் பாதிப்பால்  தனிப்பட்ட முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சொந்த பிரச்சினையைத் தாண்டி பொதுப்பிரச்சினைக்காக அல்லது பொதுமக்களின் பாதிப்புக்காக தன்னையும் கட்டுப்படுத்தமுடியாமல் பேட்டி கொடுக்கும்போதே அமைச்சர் ஒருவர் கதறி அழுதுள்ளது நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு புயல் சேதார புள்ளி விபரங்களை பேட்டியாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டியின் ஆரம்பத்திலிருந்தே கண் கலங்கியபடியே இருந்தார்.

கஜா புயல் தனது மாவட்டத்தில் நாகையிலிருந்து கோடியக்கரை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் பேயாட்டம் ஆடிப்போய்விட்டது கஜா. வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைவிட காற்றின் வேகம் அதிகமாக இருந்திருக்குமே தவிர குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மொத்தமாகக் குடியிருப்புகளை உருக்குலைத்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையால் நெல்லுக்கு மாற்றாக தென்னை, வாழை, கரும்பு என பயிரிடப்பட்டிருந்ததெல்லாம் தொண்ணூறு சதவிகிதம் வரை முற்றிலும் அழிந்துவிட்டன. இந்தப் பேரழிவை ஈடுகட்டும் வகையில் தாராளமான நிதியை ஒதுக்கவும் வழங்கவும் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். முதல்வரும் அதைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன் குடும்ப உறுப்பினர்களைப்போல பாதுகாத்து வளர்த்து வந்த மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன என சொல்லும்போது அமைச்சர் அப்படியே உடைந்துபோய் அழத்தொடங்கிவிட்டார். உண்மையில் நிவாரணப் பணியில் நிரைகுறைகள் இருந்தாலும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தமிழக அரசும் அமைச்சர்களும் நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ஒருவரே உடைந்து அழுதது மிகப்பெரிய நெகிழ்ச்சியை மக்கள் மீதுள்ள பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

click me!