மண்டை காய வைக்கும் அமித்ஷாவின் மந்திரங்கள்: சக்தி கேந்திரா! மகாசக்தி கேந்திரா! முடியலிங்ணா!

By manimegalai aFirst Published Nov 18, 2018, 1:19 PM IST
Highlights

மோடிக்கு ஆதரவான நிலை தேசம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து நின்ற 2014 தேர்தலிலேயே  பி.ஜே.பி.யால் வெறும் ஒரேயொரு தொகுதியைதான் தமிழகத்தில் கைப்பற்ற முடிந்தது. ஆனால், இப்போது மோடி, பி.ஜே.பி. என ஒட்டுமொத்தமாக அந்த டீமுக்கு எதிரான அதிருப்திகள் நிலவுகின்றன எனும் விமர்சனம் இருக்கிறது. 

மோடிக்கு ஆதரவான நிலை தேசம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து நின்ற 2014 தேர்தலிலேயே  பி.ஜே.பி.யால் வெறும் ஒரேயொரு தொகுதியைதான் தமிழகத்தில் கைப்பற்ற முடிந்தது. ஆனால், இப்போது மோடி, பி.ஜே.பி. என ஒட்டுமொத்தமாக அந்த டீமுக்கு எதிரான அதிருப்திகள் நிலவுகின்றன எனும் விமர்சனம் இருக்கிறது. 

இன்னும் ஆறு மாத காலத்துக்குள் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தினுள்  பி.ஜே.பி.யின் டெல்லி தலைமை சீர்திருத்தம் எனும் பெயரில் செய்யும் காரியங்கள் அக்கட்சி நிர்வாகிகளையே மண்டை காய விட்டுள்ளன.
 
விஷயம் என்ன தெரியுமோ....நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளரை பி.ஜே.பி.யின் தலைமை நியமித்துள்ளது. அவரோட பதவியின் பெயர் ‘சக்தி கேந்திரா பொறுப்பாளர்’. (என்னாங்ணா சொல்றீங்க? என்று நீங்கள் புலம்புவது கேக்குது, கேக்குது). 

அதுமட்டுமில்ல இப்படியாக ஐந்து சக்தி கேந்திரா பொறுப்பாளர்களை இணைத்து அவர்களுக்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் ‘மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்’. 

இந்த மகா சக்தி கேந்திராவும், அவர்களுக்கு கீழே இருக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களும் ஒழுங்கா செயல்படுறாங்களான்னு கவனிக்குறதுக்காக சில நிர்வாகிகளை நியமிச்சிருக்காங்க. (நல்ல வேளை அவங்களுக்கு பெயர் ஏதும் கிடையாது.). இந்த நிர்வாகிகள் தங்களோட ஏரியாக்களில் வலம் வந்து எல்லாமே நல்லபடியா நடக்குதான்னு கவனிச்சுட்டு இருக்கிறாங்க. ஒழுங்காக செயல்படாதவங்களை உடனடியா மாத்துன்னு அமித்ஷாவே கட்சிக்குள்ளே நேரடி கட்டளை விட்டிருக்கிறார். இந்த வகையில் சமீபத்தில் சென்னை மயிலாப்பூர்  தொகுதி பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டிருக்காங்க. இந்த ரிப்போர்ட்டும் அமித்ஷாவுக்கு உடனடியா மெயிலாகி இருக்குது. 

ஆக தமிழக விஷயத்தில் அமித்ஷாவின் தலையீடு நேரடியாக இருக்கும் நிலையில், தேர்தல் பணியின் கட்டமைப்புகள் தங்களுக்கு எளிமையாக புரியவே மாட்டேங்குது! என்று பி.ஜே.பி. நிர்வாகிகளே புலம்புகிறார்களாம். ‘ச்சும்மாவே நம்மளை மதவாத கட்சின்னு திட்டுறானுங்க. இதுல சக்தி கேந்திரா, மகாசக்தி கேந்திரான்னு ஏதோ ஆன்மீக அமைப்பு மாதிரியே பெயர் வெச்சா எப்டிங்க?’ என்று மாநில நிர்வாகிகளிடம் புலம்பியிருக்கின்றனர். 

அதற்கு அவர்களோ, ‘நீ என்கிட்ட புலம்பிட்ட, நான் யார்ட்ட போயி புலம்ப?’ என்று கேட்டிருக்கிறார்கள். 
அவ்வ்வ்......!

click me!