
டெல்லி போலீசார், சென்னையில் தினகரனை நடத்தும் விதத்தை பார்த்து, தினகரனுக்கே இந்த கதி என்றால், நாமெல்லாம் எந்த மூலைக்கு என்று சில அமைச்சர்களும், அவரது ஆதரவாளர்களும் ஆடிப்போய் உள்ளனர்.
குறிப்பாக, கூவத்தூரில் எம்.எல்.ஏ க்கள் தங்க வைக்கப்பட்ட பணியில் முக்கிய பங்காற்றிய அமைச்சர்களின் அடி வயிறு கலங்க ஆரம்பித்து, அடிக்கடி பாத் ரூம் சென்று வருகின்றனர்.
தினகரன், ஆர்.கே.நகர் வேட்பாளராக களம் இறங்கிய போதே, அவரை முழுவதுமாக ஆடவிட்டு அடிக்கலாம் என்று முடிவெடுத்தது டெல்லி.
அதற்காக, பன்னீர்செல்வம், திவாகரன், எடப்பாடி என மூன்று தரப்பினர் தங்களால் முடிந்த அளவுக்கு பண பரிவர்த்தனை விவரங்களை டெல்லிக்கு ஆதார பூர்வமாக வழங்கியதாக தகவல்.
அடுத்து, டெல்லி புரோக்கரை தினகரனுக்கு அறிமுகப்படுத்தி, மணல் தாதா ஒருவரிடம் இருந்து பெற்ற 50 கோடி ரூபாயை கொண்டு சேர்த்தது, தினகரனுக்கு நெருக்கமான வழக்கறிஞர் என்று சொல்லப்படுகிறது.
தினகரன் வேட்பாளராக களமிறங்கிய நாளில் இருந்தே அவரை சுற்றி ஒரு ஸ்பெஷல் உளவு படை பிரிவை அனுப்பி, அவரோடு தொடர்பில் உள்ளவர்கள், அவரோடு செல்போனில் பேசுபவர்கள், அவர்களது உரையாடல்கள் என அனைத்தையும் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டிய பின்னரே, தினகரனிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தனர் டெல்லி போலீசார். ஆரம்பத்தில் அனைத்தையும் மறுத்ததுடன், மழுப்பலாக பதில் சொன்ன தினகரன், ஆதாரங்களை எடுத்து வீசியவுடன் வேறு வழியின்றி ஒத்துக்க கொள்ள ஆரம்பித்தார்.
அதை தொடர்ந்து கைது, ஊர் ஊராக சென்று விசாரணை என்று தினகரனை பாடாய் படுத்தி வருகிறது டெல்லி போலீஸ். சென்னை கொண்டு வரப்பட்ட தினகரனை, போலீசார் நடத்திய விதத்தை பார்த்து, இங்குள்ள சில அமைச்சர்கள் சப்த நாடியும் ஒடுங்கி போய் உள்ளனர்.
தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இங்குள்ள சில அமைச்சர்களும், விசாரணைக்கு உட்படுத்தவும் கைது செய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இன்னும் அடுத்தடுத்து என்னென்ன தாக்குதல்களை எதிர் கொள்ள போகிறோமோ என்ற பயத்தில் பலர் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.