
சட்டமன்றத்தை கூட்டும் அதிகாரம் சபாநாயகர் தனபாலுக்கு மட்டுமே உண்டு. ஆனால், தலித் எம்.எல்.ஏ க்கள் கோரிக்கை விஷயத்தில், அவர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
தற்போதுள்ள சூழ் நிலையில், எக்காரணம் கொண்டும் சட்டப்பேரவையை கூட்ட வேண்டாம் என்று சபாநாயகர் தனபாலிடம், முதல்வர் எடப்பாடி கேட்டு கொண்டுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இல்லை. சசிகலா சிறையில் இருக்கிறார். அதனால், முதல்வர் எடப்பாடியின் பேச்சை, சபாநாயகர் தனபால் எந்த அளவுக்கு கேட்பார் என்ற அச்சத்தில் இருக்கின்றனர் அமைச்சர்கள்.
தலித் எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கிய சபாநாயகர் தனபால், தலித் சமூகத்திற்கு, அமைச்சரவையில் முக்கியத்துவமும், உரிய பிரதிநிதித்துவமும் அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
அதனால், அமைச்சர் வேலுமணிக்கும், சபாநாயகர் தனபாலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், தங்கள் கோரிக்கை நிறைவேறாத கோபத்தால், அவர் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு உத்தரவிட்டால், இருக்கும் சிக்கல்கள் போதாதென்று எடப்பாடிக்கு மேலும் சிக்கல்கள் வந்து சேரும்.
மேலும், சட்டமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை தவிர, எனக்கு வேறு எந்த அதிகாரம் இருக்கிறது என்று, அவர் முதல்வரிடமே நேரடியாக தமது வருத்தத்தை சொல்லி புலம்பி இருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி மீதும், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் ஏக கடுப்பில் இருக்கும் சபாநாயகர் தனபால், திமுகவின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.
அதனால், முள்ளின் மீது போட்ட சேலையை பக்குவமாக எடுப்பது போல, சபாநாயகர் தனபாலிடம், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மிகவும் இசைவாக பேசி வருவதாக தகவல்.