
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பார்கள் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி அணி, ஒ.பி.எஸ் அணி என இரண்டாக செயல்பட்டு வருகிறது.
இதில் எடப்பாடி தலைமையிலான அரசு இப்பவோ அப்பவோ என்று கத்தியின் விளிம்பில் நிற்பது போன்று அல்லல் பட்டு வருகிறது.
காரணம் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களுமே அவருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை ஆட்டி வைத்து வந்த சசிகலாவும் டிடிவி தினகரனும் சிறையில் உள்ளனர். ஆனால் அவர்களின் விசுவாசிகள் சிலர் எடப்பாடி தரப்பில் இருப்பதால் தான் எடப்பாடி அரசு ஆட்டம் காண்கிறது என்கின்றனர் விவரவம் அறிந்தவர்கள்.
அதனால் எப்படியாவது தனக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒ.பி.எஸ் அணியை வளைத்து போட்டு விட வேண்டும் என இ.பி.எஸ் திட்டமிட்டார்.
ஆனால் அதற்கான செயல்பாடுகள் வெளிப்படையாக ஆரம்பித்தும் இதுவரை ஜாதக காட்டம் கூடவில்லை போலும். இழுப்பரியாகவே இருந்து வருகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஒ.பி.எஸ் தான் மக்களை சந்திக்க செல்வதாக கிளம்பிவிட்டார்.
அதன்படி இன்று திண்டுக்கலில் அதிமுக புரட்சி தலைவி அம்மா கூட்டம் ஒ.பி.எஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் ஆதரவு தெரிவித்து அணியில் இணைந்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஒ.பி.எஸ், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு எடப்பாடி அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
சமாதானம் என்று கூறியவர்கள் இதுவரை சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பது உறுதி எனவும் சவால் விடுத்தார்.
மேலும் எங்களின் அணி ஜனநாயக இயக்கமாக வளர்ந்து புதிய சகாப்தத்தை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.