தி.மு.க.விடம் கட்சியை அடகு வெச்சிட்டார் செல்லூர் ராஜு.. மாஜி அமைச்சரை விளாசும் மதுரை அ.தி.மு.க..!

Published : Feb 07, 2022, 03:50 PM IST
தி.மு.க.விடம் கட்சியை அடகு வெச்சிட்டார் செல்லூர் ராஜு.. மாஜி அமைச்சரை விளாசும் மதுரை அ.தி.மு.க..!

சுருக்கம்

"தி.மு.க. தனி மெஜாரிட்டியில் மதுரை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கு வழி வகுத்து கொடுத்திருக்கார்"

பிரிக்கவே முடியாத இரண்டு விஷயங்கள்! என்றால் அது செல்லூர் ராஜூவும் – சர்ச்சைகளும் தான். செல்லூராரின் சர்ச்சை புகழ் பாட எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் மிக முக்கியமானவை, தெர்மகோல், ஈஜிபுத்து வெங்காயம் (எகிப்து வெங்காயம்), அ.தி.மு.க.வை வழிநடத்த ஒரு பெண்ணால்தான் (சசிகலாவை மறைமுகமாக சொல்கிறார்) முடியும்! என்று பல விஷயங்கள்.

அளுங்கட்சி புள்ளியாக, அமைச்சராக இருக்கும்போதுதான் சர்ச்சைகளில் சிக்கினார் என்று பார்த்தால், இப்போது எதிர்க்கட்சி புள்ளியாக இருக்கும்போதும் சர்ச்சை பரபரப்பு வளையத்தினுள்ளேதான் வாழ்கிறார் செல்லூரார். இப்போது சொந்தக் கட்சிக்காரர்களாலேயே ‘தி.மு.க.வின் ஸ்லீப்பர்செல்லாக மாறிட்டாரா செல்லூர் ராஜூ?’ என்று விமர்சன கேள்வி வைக்குமளவுக்கு ஒரு பரபரப்பில் சிக்கியுள்ளார்.

அதாவது மதுரை மாநகராட்சியின் நூறு வார்டுகளுக்கான கவுன்சிலர் வேட்பாளர்கள் லிஸ்ட் அதிகாரப்பூர்வமாக வெளியானதும் மதுரை அ.தி.மு.க.வினர் பலருக்கு மிக கடுமையான அதிர்ச்சியாம். சீட் கிடைக்காத லெட்சுமி எனும் மாஜி கவுன்சிலர் “என்கிட்ட நேர்காணல் நடத்திய செல்லூர் ராஜூ’ நீ தாம்மா வேட்பாளர். நீ நின்னா ஜெயிச்சுடுவேன்னு எல்லாரும் சொல்றாங்க’ன்னு சொல்லி அனுப்பினார். ஆனால் வேட்பாளர் பட்டியல்ல என் பேரு இல்லை. அந்தப் பட்டியலை பார்க்கும் போது செல்லூர் ராஜூ, தி.மு.க.விற்கு ஸ்லீப்பர் செல்லாக மாறிட்டாரோன்னு நினைக்க தோணுது. தி.மு.க. தனி மெஜாரிட்டியில் மதுரை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கு வழி வகுத்து கொடுத்திருக்கார்.” என்று போட்டு தாக்கியிருக்கிறார்.

வட்டச் செயலாளர் ராஜா சீனிவாசன் “செல்லூர் ராஜூ இப்போது தி.மு.க.விடம் சரண்டராகிவிட்டார். அதனால்தான் தோற்க கூடிய கவுன்சிலர் வேட்பாளர்களாக பார்த்து களமிறக்கிவிட்டுள்ளார். ரெய்டு நடத்தாமலும், தன் குடும்பச் சொத்துக்களை பாதுகாத்துக்கவும் தான் இப்படி கட்சியை தி.மு.க கிட்ட அடமானம் வெச்சிருக்கார்.” என்று புரட்டி எடுத்திருக்கார். அதோடு இந்த இரண்டு பேரும் பா.ஜ.க.வில் இணைந்து, கையோடு கவுன்சிலர் வேட்பாளர் சீட்டையும் வாங்கிவிட்டார்கள்.

இந்த புகார் சாடல்கள் குறித்து கருத்து தெரிவிக்க செல்லூர் ராஜூ தயாராக இல்லாத நிலையில்,  அவரது ஆதரவு நபர்களோ “கவுன்சிலர் வாய்ப்பு கிடைக்காததால் பா.ஜ.க.வுக்கு தாவி, பணமும், சீட்டும் வாங்கிவிட்டு இப்போது செல்லூராரை தப்பா பேசுறாங்க. அந்த துரோகிகளை விட்டுத்தள்ளுங்க. தோற்கப்போறவங்க என்னத்த கூவி என்ன நடக்க போவுது?” என்கிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!