"சின்னம்மா கழகத்தை வழிநடத்த வாருங்கள்" - அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் நேரில் வலியுறுத்தல்

First Published Dec 10, 2016, 3:54 PM IST
Highlights


அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியினர் சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி மறைந்ததை அடுத்து அதிமுகவுக்கு தலைமை தாங்க அடுத்து யார் என்ற கருத்து நிலவுகிறது. 
அடுத்து சசிகலா தான் வருவார் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அதற்கு முன்னர் பேட்டியளித்த பொன்னையன் ஜெயலலிதா ஆன்மா விரும்பும் ஒருவர் தான் பொதுச்செயலாளராக வருவார் என்று சூசகமாக தெரிவித்தார். 
இந்நிலையில் இன்று மதியம் மதுசூதனன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து அவர்தான் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். 

மதுசூதனன், செங்கோட்டையன், சைதை துரைசாமி, வளர்மதி , ராஜன் செல்லப்பா, கோகுல இந்திரா , தமிழ்மகன் உசேன், சி.ஆர்.சரஸ்வதி,  உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்தனர்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் எனக் கூறினர். 
அதிமுகவின் மையப்புள்ளியாக இருந்து கட்சியை வழிநடத்துமாறு சசிகலாவிடம் நிர்வாகிகள் கோரிக்கை.

அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்” என கூறிய சைதை துரைசாமி. தெருவில் போகிறவன் வருகிறவன் எல்லாம் கருத்து சொல்வதா என்று கோபப்பட்டார்.
“44 ஆண்டுகால அதிமுக பாரம்பரியத்தை காப்பாற்ற சசிகலா தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்” என செங்கோட்டையன் கேட்டுகொண்டார்.

click me!