ஏப்.7 கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

By Narendran S  |  First Published Apr 3, 2023, 9:01 PM IST

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் ஏப்.7 ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் ஏப்.7 ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு வருகின்ற 7.4.2023 - வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, கூட்டம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

இதையும் படிங்க: உண்மையே எனது ஆயுதம்.. அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு மனம் திறந்த ராகுல் காந்தி

Tap to resize

Latest Videos

இக்கூட்டத்தில், கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு.. சூரத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளரான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!