'அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்' - முழு விவரம்...

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
'அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்' - முழு விவரம்...

சுருக்கம்

1. அஇஅதிமுக பாெதுச்செயலாளரும், முதலமைச்சருமான இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு இரங்கல்

 

2.புரட்சித்தலைவி அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அவருக்காக மனம் உருகி பிரார்த்தனை செய்த காேடானு கோடி மக்களுக்கும், நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்ற அனைவருக்கும் நன்றி

 

3. அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டிக்காத்து வளர்த்திட புரட்சித்தலைவி அம்மா மேற்காெண்ட பல்வேறு தியாகங்களுக்கு வீர வணக்கம்

4. புரட்சித்தலைவி அம்மா தமிழக முதலமைச்சராக பணியாற்றி மக்களுக்கு செய்துள்ள அரும் தாெண்டுகளுக்கு புகழ் அஞ்சலி

 

5. புரட்சித்தலைவி அம்மா விண்ணுலகம் சேர்ந்த நிலையில், அஇஅதிமுகவைக் காப்பாற்றவும், வழி நடத்தவும், அஇஅதிமுக பாெதுச்செயலாளர் நியமனத்திற்கு பாெதுக்குழுவின் ஒப்புதல்

 

6. புரட்சித்தலைவி அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற குடியரசு தலைவர், பிரதமர், தமிழகம் மற்றும் கேரள ஆளுநா்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், திரை உலகினர் மற்றும் பாெதுமக்கள் உள்ளிட்டாேருக்கு நன்றி. புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆா் நினைவிடம் அருகே அம்மா அவா்களுக்கும் நினைவிடம் அமைக்க சின்னம்மா விடுத்த வேண்டுகாேளை ஏற்று தேவையான அனுமதிகளையும், ஏற்பாடுகளையும் அளித்த தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நன்றி.

 

7. மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் இறுதி ஊர்வலத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனுக்குடன் செய்து காெடுத்த மத்திய அரசுக்கு நன்றி

 

8.புரட்சித்தலைவி அம்மா மருத்துவமனையில் இருந்து விடுத்த அன்பு வேண்டுகாேளை ஏற்று, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தாெகுதிகளில் அம்மா அவா்கள் கேட்க விரும்பிய வெற்றிச் செய்தியை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.

 

9. புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ வெண்கலச் சிலையை அமைக்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கை

10. புரட்சித்தலைவி அம்மாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு காோிக்கை

 

11. புரட்சித்தலைவி அம்மாவுக்கு மானுட சேவைக்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்கைசாய் விருது மற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஏற்பாடுகள் செய்தல்

 

12. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டினை புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மா சாந்தி அடையும் வண்ணம் மக்கள் பணி ஆண்டாகத் தாெண்டாற்ற அழைப்பு

 

13. புரட்சித்தலைவி அம்மா நினைவு நாளில் ஒவ்வாெரு ஆண்டும், கழகத் தாெண்டா்கள் அனைவரும், கழகத்தின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைத்து, எதிாிகளை வீழ்த்தி, முன்னேற்றப்பாதையில் நடை பாேட அம்மா மீது ஆணையாக உறுதிமாெழி ஏற்றல்

14 புரட்சித்தலைவி அம்மாவின் வழிகாட்டுதகளை நினைவில் காெண்டு, சின்னம்மா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றி உறுதி ஏற்றல்

PREV
click me!

Recommended Stories

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!