"சின்னம்மா பொறுப்பேற்க தீர்மான நகலை வழங்க உள்ளோம்"- ஓபிஎஸ் பேட்டி

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
"சின்னம்மா பொறுப்பேற்க தீர்மான நகலை வழங்க உள்ளோம்"- ஓபிஎஸ் பேட்டி

சுருக்கம்

அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க கோரும் தீர்மானத்தை முதல்வரும் பொருளாளருமான பன்னீர் செல்வம் முன்மொழிய செங்கோட்டையன் வழிமொழிந்தார்.

பின்னர் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது. அம்மாவுடன் 33 ஆண்டுகள் வாழ்ந்து இமை போல் பாது காத்து நிர்வாக திறமைகளை கற்றுகொண்டவர் சின்னம்மா, அதிமுக பொதுச்செயலாளராக பணியாற்ற உகந்தவர் என பொதுக்குழு தீர்மானம்.  கழக சட்டவிதியின்படி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை சின்னம்மாவை நியமனத்திற்கு பொதுக்குழு ஒப்புதல்.இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது: 

மதிப்பிற்குரிய சின்னம்மாவிடம் கழக தலைமை ஒப்படைப்பு.  பொதுக்குழு நகல் சின்னம்மாவிடம்  ஒப்படைக்கப்படும் , ஒப்புதல் பெற செல்வதாக சின்னம்மாவை சந்திக்க செல்கிறோம் என்று ஓபிஎஸ் பேட்டியளித்தார் .சட்டவிதிகளுக்கு உட்பட்டு சின்னம்மா தேர்வு செய்யப்பட உள்ளார் எனவும்  பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

பின்னர் தீர்மான நகலை வழங்க ஓபிஎஸ் , எடப்பாடி, செங்கோட்டையன் , தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவிடம் வழங்குவதற்காக போயஸ் தோட்டம் சென்றார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு