மீண்டும் சேர்க்கப்பட்ட பணிவின் அன்புத் தம்பி... எடப்பாடியை மிரட்டிய பரபர பின்னணி!

By vinoth kumarFirst Published Dec 25, 2018, 2:11 PM IST
Highlights

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஐந்தே நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதன் பரபர பின்னணி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 
 

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஐந்தே நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதன் பரபர பின்னணி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பளருமான ஓபிஎஸின் தம்பி ஓ.ராஜா கடந்த 19ம் தேதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த ஓ.ராஜா டி.டி.வி.தினகரன் அணியில் சேரப்போவதாக ஒரு தரப்பும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக சில தரப்பினரும் கிளப்பி விட, அதிமுகவுக்கு அல்லு கிளம்பி விட்டது.

அதிர்ச்சியான அதிமுக நிர்வாகிகள் சிலர் ஓ.ராஜாவை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஓ.ராஜா தன்னிடமிருந்த ஒருசில ஆதாரங்கள் இருப்பதாகவும், தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளாவிட்டால் அதிமுக அமைச்சர்கள்  சிலரது நிலைமை சிக்கலாகி விடும் என மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.

 

நேரில் பேசிக் கொள்ளலாம் என அழைத்த நிர்வாகிகளை சந்தித்த ஓ.ராஜா தன்னை கட்சியை விட்டே நீக்க வேண்டுமென கொடிபிடித்த ஆர்.பி. உதயக்குமார், எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள் அடங்கிய முழுவிபர பட்டியலையும் காட்டி அதிர வைத்திருக்கிறார். இதையெல்லாம் திமுக தலைமையிடம் கொடுத்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? அதிமுகவிலுள்ள அத்தனை அமைச்சர்களும்  கடந்த 2 ஆண்டுகளில் என்னென்ன ஊழல் செய்தார்கள் என்கிற விவரபங்களும் எனக்கு அத்துபடி. இதைத்தான் திமுகவினர் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இதைக்கொடுத்தால் போதும். அமைச்சர்கள் சிறைக்குப்போய்விடுவார்கள் என மிரட்டி இருக்கிறார். 
 
இந்தத் தகவலை கேட்ட எடப்பாடி அதிர்ந்து போனாராம். உடனே ஓபிஎஸை அழைத்த அவர், நான் கொடுத்த அழுத்தத்தால்தான் நீங்கள் உங்கள் தம்பியைக் கட்சியை விட்டு நீக்க சம்மதித்தீர்கள். இது நமக்கு ஆபத்தாக முடியப் போகிறது என எடப்பாடி சொன்னதையடுத்து இருவரும் ஓ.ராஜாவை கட்சியில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறார்கள். அடுத்தபடியாக தமிழ்நாடு கூட்டுறவு, பால்வள சேர்மன் பதவியும் ஓபிஎஸ் தம்பி ராஜாவுக்கே அளிக்கப்படும் என்கிற உறுதியும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே நேரடியாகவும், கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டதால் ஓ.ராஜாவை 5 நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்த்திருக்கிறார்கள்.
 

click me!