அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஓபிஎஸ்…பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டி அதிரடி காட்ட ஐடியா..

Asianet News Tamil  
Published : Mar 24, 2017, 06:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஓபிஎஸ்…பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டி அதிரடி காட்ட ஐடியா..

சுருக்கம்

admk general secretary

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து அவர்களது ஆதரவை திரட்டும் முடிவில் இருக்கும் ஓபிஎஸ் அதன் மூலம் கட்சித் தேர்தலைச் சந்தித்து பொதுச் செயலாராக திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஓபிஎஸ் பதவி இழந்தார்  ஓபிஎஸ் தலைமையில் தனி அணி உருவாக்கப்பட்டது.

ஓபிஎஸ்க்கு கட்சி ரீதியாக இந்தார்இழஅ அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.பி.முனு சாமி, பி.எச்.பாண்டியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் 11 எம்எல்ஏக்களும் 12  எம்.பி.க்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக  பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. விரைவில் பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப் படுவார் என்று ஏற்கனவே மதுசூதனன் அறிவித்து இருந்தார்.

 

இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை செல்லுவதற்கு முன் டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துச் சென்றார்.

இந்நிலையில் அதிமுகவை டி.டி.வி.தினகரனிடம் இருந்து முழுமையாக கைப்பற்ற ஓபிஎஸ் தரப்பினர் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இதில் முதல்கட்டமாக பொதுக் குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக மாவட்டம் தோறும் பொதுக் குழு உறுப்பினர்களையும், தொண்டர்களையும் திரட்டி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு என்றும் அதில் ஓபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

பின்னர் ஏற்கனவே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை முறைப்படி கட்சியிலிந்து நீக்கிவிட்டு அதிமுகவை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

PREV
click me!

Recommended Stories

TN Politics 2026: திமுக ஆதரவில் தவெக ஆட்சி? இது உ.பி.க்களின் பெருமிதம் அல்ல! விஜய்யின் 'செக் மேட்' அரசியல்! செம வியூகம்!
TVK Vijay: சுப்ரீம் கோர்ட் போகும் தளபதி விஜய்? TVK-வின் 'பிளான்-B' ரெடி! தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா சீன் ரிப்பீட் ஆகுமா?