இந்தியை தமிழ்நாட்டுக்குள் விடமாட்டோம்.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்..!

Published : Apr 11, 2022, 12:18 PM ISTUpdated : Apr 11, 2022, 12:21 PM IST
இந்தியை தமிழ்நாட்டுக்குள் விடமாட்டோம்.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்..!

சுருக்கம்

டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் தலைமையேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியின் அவசியம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.

இந்தி கட்டாயம் :

அதில், "அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார். நிச்சயமாக இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை உயர்த்தும். மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும். வட மாநிலங்களில் இருக்கும் 9 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வழக்காக இந்திக்கு மாறி இருக்கின்றனர். 

8 வட மாநிலங்களும் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க சம்மதம் தெரிவித்து இருக்கின்றன. அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது. இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்." என்றார்.

ஜெயக்குமார் பேட்டி :

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் உள்ளே நுழைய விடமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தளவில் தமிழும், ஆங்கிலமும்தான், மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதுபோல், தமிழ்தான் எப்போதும் இணைப்பு மொழி என்றும் தமிழை பிரதமரே சுட்டிக் காட்டி பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சசிகலா Vs ஓபிஎஸ் - இபிஎஸ்.. அதிமுக பொதுச்செயலாளர் யார்..? இன்று வெளியாகிறது தீர்ப்பு..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!