இந்த விஷயத்தில் அதிமுக தான் முதலிடம் வகிக்கிறது... பெருமிதம் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி!!

Published : Jun 17, 2022, 08:53 PM IST
இந்த விஷயத்தில் அதிமுக தான் முதலிடம் வகிக்கிறது... பெருமிதம் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி!!

சுருக்கம்

ஆட்சியில் இல்லாவிட்டலும் அரசை விட அதிக பணிகளை செய்யக் கூடியது அதிமுக தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

ஆட்சியில் இல்லாவிட்டலும் அரசை விட அதிக பணிகளை செய்யக் கூடியது அதிமுக தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக தற்போது அடிக்கல் நாட்டி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் முதலிடம் வகிப்பது அதிமுக தான்.

ஆட்சியில் இல்லாவிட்டலும் அரசை விட அதிக பணிகளை செய்யக் கூடியது அதிமுக தான். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக் கணினி திட்டம், திருமண உதவித் தொகை திட்டம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 9 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடிந்தது.

அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்போது மருத்தவப் படிப்பை பயின்று வருகின்றனர். எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், மருத்துவம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தேன். இதேபோல் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் எந்த வித நிபந்தனையும் இன்றி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் திமுக அரசு நிபந்தனைகள் விதித்து நகைக்கடன் தள்ளுபடி செய்கிறது என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!