முதல்வர் நலம் பெற திருப்பதியில் ஆந்திர மாநில அதிமுகவினர் பூஜை - தீ சட்டி ஏந்தி வழிபாடு

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 03:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
முதல்வர் நலம் பெற திருப்பதியில் ஆந்திர மாநில அதிமுகவினர் பூஜை - தீ சட்டி ஏந்தி வழிபாடு

சுருக்கம்

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற தத்தைய்யகுண்டா கங்கையம்மன் கோயிலில் ஆந்திர மாநில அ.தி.மு.க கட்சியின் மாநில செயலாளர் பக்கர் தலைமையில் முதல்வர்  உடல் நலம் பெற தீ சட்டி ஏந்தி வழிப்பட்டனர். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 30 நாட்களாக  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வர் உடல் நலம் பெற்று மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று சர்வ மதப்பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுதும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ,ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் முதல்வர் உடல்நலம் பெற வேண்டி பூஜை ,வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மாநில அதிமுக சார்பில் , திருப்பதியில் உள்ள தாத்தைய்யகுண்டா கங்கையம்மன் கோயிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் தீ சட்டி ஏந்தி கோயிலை வலம் வந்தும் 108 தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தீபாவளிக்கு அனைவருடன் சேர்ந்து கொண்டாடும் வகையில் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் தனது பணியை தொடங்குவார் என ஆந்திர மாநில செயலாளர் பக்கர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!