உள்ளாட்சித் தேர்தல்: ஏழு மாவட்டங்களுக்கு வேட்பாளர் பட்டியல்... முதல் கட்சியாக அறிவித்தது அதிமுக!

By Asianet TamilFirst Published Dec 14, 2019, 8:01 AM IST
Highlights

“மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுக முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய  தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிச. 9 அன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. வரும் திங்கள் கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இந்நிலையில் அதிமுக தலைமை முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 
இதுதொடர்பாக அதிமுக தலைமையகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையத்து அதிமுக வேட்பாளர்கள் இன்றும் திங்கள் கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த பகுதிகளில் போட்டியிட உள்ளார்கள் என்ற விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. 

click me!