சர்ச்சையை கிளப்பிய பங்காரு அடிகளார் - கே.என்.நேரு சந்திப்பு.. சமூக நீதி சூப்பர்.. திமுகவை கிழித்த நெட்டிசன்கள்

By Raghupati RFirst Published Mar 13, 2022, 1:25 PM IST
Highlights

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவில் செயல்பட்டு வருகிறது. வருடா வருடம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு இருமுடி கட்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். 

தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலத்திலிருந்து குறிப்பாக கர்நாடகா ,ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மேல்மருவத்தூருக்கு பேருந்துகளில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமானவரும், திமுகவின் சீனியரும் கே.என். நேரு நான்கு முறை எம்.எல்.ஏ வாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்களை அமைச்சர் கே என் நேரு அவர்கள் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களை நேரில் ஆசி பெற்றார்' என்று தகவல் வெளியாகியது.

திமுக என்றாலே சுயமரியாதையை பேசும் கட்சி என்றும், சமூக நீதியை பின்பற்றும் கட்சி என்றும் கூறுவார்கள். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதில்,'இன்று காலை முதலே அமைச்சர் கே.என். நேரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது.  

இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக நேரு, தன் அருகில் சோபா இருந்தும் சாமியாரின் முன் தரையில் அமர்ந்து இருந்தார்.தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை.

So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.

ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம்,

பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே.

— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD)

 

இதுகுறித்து எதிர்கட்சிக்காரர்கள் சோசியல் மீடியாக்களில் கிழித்து தொங்கவிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுகவின் எம்பியான தருமபுரி செந்தில் குமார், வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்ட பதிவில், 'கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

click me!