கடைசி வரை ஜவ்வா இழுத்து கழற்றிவிட பக்கா பிளான் போட்ட எடப்பாடி !! ஸ்மெல் பண்ணி உஷாரான பாஜக !!

By Selvanayagam PFirst Published Feb 8, 2019, 9:15 AM IST
Highlights

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை வலுக்கட்டாயமாக கூட்டணிக்கு இழுக்கும் பாஜகவை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி போட்ட பக்கா பிளான் குறித்து உளவுத் துறை மூலம் அறிந்த பாஜக உடனடியாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனத நேய மக்கள் கட்சி ஆகியவை இந்த கூட்டணியில் இடம் பெறும் என தெரிகிறது.

அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக, அதிமுகவும் பாஜகவும் , திரைமறைவில் நடத்தி வரும் பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்துக் கொண்டே போகிறது.

பாஜக கேட்கும் தொகுதிகளை, அதிமுக தர தயாராக இருந்தாலும் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை, அந்த கட்சிக்கு விட்டுத்தர வேண்டிய நெருக்கடியில், அதிமுக உள்ளது.

இதில் எத்தனை இடங்கள் வெற்றி பெற்றாலும், அதன் பலன் அனைத்துமே, தேர்தலுக்கு பின், பாஜகவுக்குத்  தான் கிடைக்க போகிறது. அதனால் சிட்டிங்' எம்.பி.,க்கள் பலரது, தொகுதிகள் பறிபோக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தமிழகத்தைச் சோந்த யாரும் இல்லததால் முறையாக தொகுதிகள் குறித்து பேசமுடியவில்லை என்கின்றனர் அதிமுக தரப்பினர்.

தமிழகத்தில் உள்ள கள நிலவரங்கள் தெரியாத, டெல்லி தலைவர்களுடன் பேசி, விஷயத்தை புரிய வைப்பதில், அதிமுக தரப்பு திணறுகிறது. மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூட, கூட்டணி பேச்சு வளையத்தில் தற்போது இல்லை. 

இது ஒருபுறம் என்றால், பாஜகவுடன் நடத்தி வரும் பேச்சு குறித்து, அதிமுகவில் இரண்டு அமைச்சர்களை தவிர, வேறு யாருக்கும், எதுவும் தெரியாது. முழுக்க முழுக்க, அந்த இருவர் மட்டுமே முன்னின்று தரும் வாக்குறுதிகள், எந்தளவு நிறைவேறும் என்ற சந்தேகம், பாஜகவுக்கு  வந்துவிட்டது.

அதே நேரத்தில் கூட்டணி குறித்து உடனே அறிவித்து விட வேண்டாம் என்று அதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முதலில் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத பாஜக, உளவுத் துறை கொடுத்த அறிக்கையால் அதிர்ந்து போயுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, பேச்சுவார்த்தையை ஜவ்வாக இழுத்து கடைசி நேரத்தில் கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கூட்டணி இல்லை என்று அதிமுக கைவிரிக்க பிளான் போட்டுள்ளது அந்த அறிக்கை மூலம் தெரியவந்தது.

இதனால் உஷாரான பாஜக கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரின் தமிழக சுற்றுப் பயணத்தின்போதே அதனை தெளிவு படுத்த வேண்டும்' என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. 

click me!