அதிமுக அம்மா அணி தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி - அடையாரில் பரபரப்பு...

Asianet News Tamil  
Published : Apr 20, 2017, 12:06 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
அதிமுக அம்மா அணி தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி - அடையாரில் பரபரப்பு...

சுருக்கம்

admk amma team member try to fire sucide

இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அவருடைய வீட்டிற்கு வந்தனர். இதைபார்த்த அங்கிருந்த அதிமுக அம்மா அணியின் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

டெல்லி விடுதி ஒன்றில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் இருந்து 1.50 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுக அம்மா கட்சியின் சார்பில் துணை பொதுச்செயலாளர் தினகரன் ரூ.60 கோடி தர முன்வந்தது தெரியவந்தது.

சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னை வந்தனர்.

பின்னர், தினகரனுக்கு சம்மன் வழங்கி விசாரணை செய்ய நேரடியாக தினகரன் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த அதிமுக அம்மா அணியின் தொண்டர் மயிலாபூரை சேர்ந்த ரவிச்சந்திரன் திடீரென தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைபார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் அடையாரில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று சம்மன் அளித்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!