கொரோனா கட்டுப்பாடு எதிரொலி.. சென்னை மாநகரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு..

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2021, 12:26 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அரசு அதிரடியாக  நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்தாண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை நகரங்களில் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அரசு அதிரடியாக  நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும், நின்றி பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நின்று பயணம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது என நடத்துனர்கள் அறிவுருத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 22 ஆயிரம் அரசு பேருந்துகள் உள்ளபோதிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக15000 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 

கூட்டம் குறைவாக இருப்பதால் பேருந்துகளும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன, அரசின் புதிய உத்தரவால் பேருந்துகளில் பயணிகள் இனிய  நின்றபடி பயணம் செய்ய முடியாது எனவே, கூடுதல் பேருந்துகள் தேவை என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய கட்டுப்பாட்டின் காரணமாக அதிக கூட்ட நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் பயணிகளை சமாளிக்க கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த வழித்தடங்களில் மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் அதில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தே பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

click me!