கொரோனா இரண்டாவது அலை தீவிரம்.. அனைவருக்கும் தடுப்பூசி அவசியம்.. மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2021, 11:50 AM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்த  மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன. எனவும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், 

கொரோனா இரண்டாவது அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்த  மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன. 

எனவும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும் எனவும்  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: கொரோனா இரண்டாவது அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்த மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன. 

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதாகவும் ,அடுத்த  நான்கு வாரங்கள்  மிகவும் நெருக்கடியானவை எனவும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார். இந்நிலையில் கீழ்க் கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான முககவசம், பாதுகாப்பு கவசஉடைகள், கிருமி நாசினி, கை  சுத்திகரிப்பான்,வெப்பமானி, ஆக்சிஜன் அளவைமானி (pulse oxy meter),போன்றவற்றையும், ரெம்டிசிவிர், எனாக்சபிரின் போன்ற முக்கிய மருந்துகள் பதுக்கப்படுவதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொருட்களின் விலை அதிகரிக்காமலும், தரமான பொருட்கள் தட்டுப் பாடின்றி எளிதில் கிடைக்கவும் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும். நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை அதிகரித்து, மேம்படுத்த வேண்டும். போதிய மருத்துவத் துறை பணியாளர்களை உடனடியாகநியமிக்க வேண்டும். 

•கொரோனாவை தடுத்திட தடுப்பூசி அவசியம், மிகவிரைவாக, குறுகிய காலத்தில், குறைந்த பட்சம் 70 விழுக்காடு மக்களுக்காவது தடுப்பூசியை வழங்கிட வேண்டும். அப்பொழுதுதான் தடுப்பூசிகள் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும். அந்த இலக்கை எட்டுவது குறித்த  திட்டத்தை  மத்திய அரசு வெளியிட வேண்டும்.

• இந்த இலக்கை எட்டுவதற்கு, தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் உரிமையை மத்திய அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுத் துறை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட  நிறுவனங்கள் மூலம் அரசே கொரோனா தடுப்பூசி தயாரிப்பில்  இறங்க வேண்டும்.

•கொரோனா தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

•கொரோனா முதியவர்களையும், இணை நோயர்களையும் அதிகம் பாதிக்கிறது. இரண்டாவது அலை இளம் வயதினரையும்,  இணை நோயற்றவர்களையும் கூட பாதிக்கிறது. இந்த இளம் வயதினர் வேலை நிமித்தமாக வீடுகளுக்கு வெளியே அதிக நேரம் இருக்கின்றனர். எனவே ,
இவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவும் ஆபத்தும் அதிகம். எனவே  18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரானா தடுப்பூசியை வழங்க வேண்டும். 

இந்நிலையில்' தேவைப்படுவோர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும் ' என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.  அதைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

•அறிவியலுக்கு எதிராகவும் தடுப்பூசிகளுக்கு எதிராகவும் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்புவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

•கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில் டெங்குக் காய்ச்சல் பரவலை தடுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  கர்ப்பக் கால பெண்களின் பராமரிப்பு போன்ற இதர சுகாதாரத்துறை நடவடிக்கைகள் பாதிக்கப் படாமலும் அரசு  செயல்பட வேண்டும்.

•கொரோனா தொற்றின் அறிகுறிகள், தற்பொழுது அது உருவாக்கும் புதிய அறிகுறிகள், தடுப்பூசியின் பயன்கள், தடுப்பூசி போடப்படும் இடங்கள் போன்றவை பற்றி மக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம், சுணக்கத்திற்கான காரணங்களை ஆராய்ந்து அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

•முகக் கவசம் அணிதல் ,கை கழுவுதல், தனிநபர் இடைவெளியை பராமரித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

•திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் செயல்பாட்டை முற்றிலும் தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். மதுக் கடைகள் மூடப்பட வேண்டும்.

•ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகளின்  அடக்க விலை 200 ரூபாய் அளவிற்கு குறைந்துவிட்ட நிலையில், பரிசோதனைக்கான கட்டணம் 1500 ரூபாய் வரை தமிழகத்தில் உள்ளது. அதை பிற மாநிலங்களைப் போல 400  ரூபாய் வரை குறைத்திட வேண்டும்.
 இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . 

 

click me!