
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை வீல் சேரில் வைத்து சால்வை மூலம் அவர் முகத்தை மறைத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு அவரது குடும்பத்தினர் ரகசியமாக அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் நேற்று (08-07-2018) சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். அவர் விமான நிலையத்திற்கு வரும் தகவல் அறிந்து ஏராளமான செய்தியாளர்கள் மற்றும் கேமரா மேன்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அமெரிக்கா செல்லும் விமானம் என்பதால் விஜயகாந்த் சுமார் 11 மணி அளவில் விமான நிலையம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.