
மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையின் தீவிர நெருக்கடியால் நாம் தமிழர் கட்சியின் நிதி ஆதாரங்கள் கிட்டத்தட்ட முடக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரம், துப்பாக்கிச் சூடு போன்றவற்றை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை காவல்துறை மட்டும் அல்ல உளவுத்துறையும் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது. கலவரத்திற்கு காரணமான தூத்துக்குடி போராட்டத்தை வழிநடத்தியதே நாம் தமிழர் கட்சியினர் தான் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.