உதயநிதியை ஏறியடித்த ராதிகா.. இடைமறித்து சரமாரியாக கழுவி ஊற்றிய இளம் பெண்.. பிரச்சாரத்தில் பரபரப்பு.

Published : Mar 26, 2021, 10:19 AM ISTUpdated : Mar 26, 2021, 10:20 AM IST
உதயநிதியை ஏறியடித்த ராதிகா.. இடைமறித்து சரமாரியாக கழுவி ஊற்றிய இளம் பெண்.. பிரச்சாரத்தில் பரபரப்பு.

சுருக்கம்

நடிகை ராதிகாசரத்குமாரை மடக்கி சரமாரியாக கேள்வி கேட்ட பெண்ணால் பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் கமல் கூட்டணியில் ஐஜேகே கட்சியின் வேட்பாளராக முஹம்மது இத்ரீஸ் போட்டியிடுகிறார்.

நடிகை ராதிகாசரத்குமாரை மடக்கி சரமாரியாக கேள்வி கேட்ட பெண்ணால் பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் கமல் கூட்டணியில் ஐஜேகே கட்சியின் வேட்பாளராக முஹம்மது இத்ரீஸ் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து ஆட்டோ சின்னத்தில் வாக்கு கோரி நடிகையும், சமக-வின் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து மிக கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். எந்தவிதமான மக்கள் சேவையிலும் ஈடுபடாதவர் உதயநிதி ஸ்டாலின், அரசியலில் களம் இறங்குவதற்காகவே சினிமாவில் நடித்துவிட்டு நேரடி அரசியலுக்கு வந்துள்ளார். 

மேலும்  மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதை நான் அவமானமாக கருதுகிறேன் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். பிறகு "இதுவரை ஊழலே செய்யாத ஒரு அமைச்சர் அல்லது எம்எல்ஏ என யாராவது தமிழகத்தில் இருந்தால் அவரை என் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள்" என்றும் ஆவேசம் அடைந்தார். இந்த பேச்சை கேட்டுக் கொண்டிருந்த  அப்பகுதி பெண் ஒருவர் ராதிகா சரத்குமாரை இடைமறித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே தவறைத்தான் செய்வீர்கள் என்றார். 

மேலும், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பினார். கார்ப்பரேஷன் குழாய் தண்ணீரில் புழுக்கள் கலந்து வருவதாகவும் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என ராதிகா சரத்குமார் இடம் முறையிட்டார். செய்வது அறியாது முழித்த ராதிகா சரத்குமார் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் நிச்சயம் நாங்கள் செய்து தருவோம் எனக் கூறி அங்கிருந்து நழுவினார். 

 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!