"முதலமைச்சர் விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்" - நடிகை லதா அப்போல்லோவில் பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 03:07 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
"முதலமைச்சர் விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்" - நடிகை லதா அப்போல்லோவில் பேட்டி

சுருக்கம்

1970 - 1980 காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை லதா, அப்போலோவில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்தார்.

ஒரு மாதகாலமாக அப்போலோ மருத்துவமனயில் தங்கி முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். 

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் பெற பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிய, பல்வேறு தரப்பினர் மருத்துவமனை சென்று விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில், சிங்கப்பூர் துணை பிரதமரின் ஆலோசகர் ஜோஸ்வா, அப்போலோ சென்று முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

முன்னதாக, நடிகை லதா, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்போலோ மருத்துவமனை சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை லதா, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வருகிறார் என்றும் அவர் விரைவில் வீடு திரும்ப ஆண்டவனிடம் வேண்டுவதாகவும் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!