காங்கிரசுக்கு கல்தா.. பாஜவில் குஷ்பு.. எல்லாம் பதவிக்காக.. அன்றே சொன்ன ஏசியாநெட் தமிழ்..!

By Selva KathirFirst Published Oct 12, 2020, 9:35 AM IST
Highlights

திரைப்படங்களில் நடிக்கும் போதே கதை, நாயகர்கள், இயக்குனர்கள் எல்லாம் குஷ்புவுக்கு முக்கியம் இல்லை, சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என்பது தான் அவர் ஒரு படத்தை இறுதி செய்யும் அம்சமாக இருந்தது. இப்போதும் கூட பதவிக்காகவே திமுக, காங்கிரஸ் இனி பாஜக என குஷ்பு அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களில் நடிக்கும் போதே கதை, நாயகர்கள், இயக்குனர்கள் எல்லாம் குஷ்புவுக்கு முக்கியம் இல்லை, சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என்பது தான் அவர் ஒரு படத்தை இறுதி செய்யும் அம்சமாக இருந்தது. இப்போதும் கூட பதவிக்காகவே திமுக, காங்கிரஸ் இனி பாஜக என குஷ்பு அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குஷ்பு பாஜகவில் இணைவதற்கான பேரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கடந்த ஜூலை மாதமே ஏசியாநெட் தமிழில் சொல்லியிருந்தோம். ஆனால் நமது செய்தியை படித்தவிட்டு, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட குஷ்பு, வேலையில்லாத பத்திரிகையாளர்கள் இப்படி வதந்தியை பரப்புவதாக கடுமையாமை வார்த்தைகளை பயன்படுத்தி ஏசியாநெட்டை விமர்சித்திருந்தார். ஆனால் குஷ்பு பாஜகவில் இணைகிறார் என்கிற செய்தியில் ஏசியாநெட் உறுதியாக இருந்தது. மேலும் குஷ்புவின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளையும் தெளிவாக எடுத்துரைத்து அவருக்கு பதவி மட்டுமே முக்கியம் என்பதையும் இன்னொரு செய்தியில் ஏசியாநெட் கூறியிருந்தது.

ஏசியாநெட் தமிழ் இப்படி செய்தி வெளியிட்டு மூன்றே மாதங்களில் பாஜக பக்கம் தாவியுள்ளார் குஷ்பு. குஷ்பு கட்சி மாறுவது எல்லாம் புதுமையான ஒரு விஷயம் இல்லை. திரைப்படங்கள், சீரியல்களில் நடித்து வந்த குஷ்பு ஜெயா டிவியில் ஜாக்பாட் எனும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த போது அதிமுகவில் இணைய முயற்சித்தார். ஆனால் அதற்கு சசிகலா முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் தான் கலைஞரை சந்தித்து திமுகவில் இணைந்ததுடன் கலைஞர் டிவிக்காக நிகழ்ச்சி தயாரிக்கத் தொடங்கினார். இதன் மூலமே குஷ்புவுக்கு கொள்கை என்பது வெறும் மண்ணாங்கட்டி என்பதை தெளிவுபடுத்தினார்.

திமுகவில் இருந்து ஸ்டாலின் ஆதரவாளர்களால் விரட்டி அடிக்கப்பட்ட பிறகு பாஜகவில் இணைய குஷ்பு முயற்சி செய்தது ஊருக்கே தெரியும். ஆனால் அப்போது பாஜக தமிழக தலைவராக இருந்த தமிழிசை குஷ்புவை பாஜகவில் சேர்க்கவிடாமல் தடுத்துவிட்டார் என்று பேச்சுகள் அடிபட்டன. இதன் பிறகே டெல்லியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். அப்போதே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி என்கிற நிபந்தனையுடன் தான் தன்னை குஷ்பு காங்கிரசில் இணைத்துக் கொண்டதாக பேச்சுகள் அடிபட்டன.

அந்த வகையில் குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூரில் போட்டியிட குஷ்பு முயற்சித்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிட குஷ்பு திட்டமிட்டார். ஆனால் திருச்சியை திருநாவுக்கரசருக்கு வழங்கியது காங்கிரஸ் மேலிடம். அப்போது முதலே காங்கிரஸ் மேலிடம் மீது குஷ்புவுக்கு அதிருப்தி ஏற்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் கடுமையாக உழைக்கும் தொண்டர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்று கடந்த ஜூலை மாதம் ட்வீட் செய்தார்.

மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாராட்டி ட்வீட்டினார். இதனால் தான் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த பின்னணியை விசாரித்த போது தான் குஷ்பு வழக்கம் போல் பாஜக மேலிடத்துடன் பேரம் பேசி வருவது தெரியவந்தது. அதன்அடிப்படையில் தான் ஜூலை 15ந் தேதி குஷ்பு பாஜகவில் இணைய ரகசிய பேரம் என ஆசியா நெட் செய்தி வெளியிட்டது. அதனை அப்போது மறுத்த குஷ்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தான் பாஜகவில் இணைய உள்ளதாக ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் என வாங்கிக் கொண்டு வதந்திபரப்புவதாக குஷ்பு கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் குஷ்பு டெல்லி புறப்ப்டடுச் சென்றார். அவரிடம் பாஜகவில் இணைய உள்ளீர்களா எனும் கேள்விக்கு நோ கமென்ட்ஸ் என்று பதில் அளித்தார். சரி காங்கிரசில் உள்ளீர்களா எனும்கேள்விக்கு நோ கமென்ட்ஸ் என்று கூறிவிட்டு சென்றார் குஷ்பு. இந்த ஒரே ஒரு பதிலே குஷ்பு காங்கிரசில் இருந்து விலகிவிட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்புறம் என்ன இனி பாஜக மேலிடத்திடம் வழக்கம் போல் ராஜ்யசபா எம்பி பதவி, பாஜக செய்தி தொடர்பாளர் எனும் நிபந்தனையுடன் இந்த நேரம் குஷ்பு பாஜக கட்சியில் இணைந்திருப்பார்.

இப்போது மறுபடியும்ஒன்றை நினைவுபடுத்துகிறோம், பொதுவாக டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ஹீரோயின்கள் தங்கள் மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்பவே இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிப்பார்கள். ஆனால் குஷ்பு ரஜினி, கமல் போன்றோருடன் ஜோடி போட்டிருந்த சமயத்தில் நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டத்தில் உள்ள ஹீரோக்களுடன் படுக்கை அறை காட்சியில் கூட நடித்துள்ளார். இதற்கெல்லாம் ஒரே காரணம் அதிக சம்பளம். அதே போலத்தான் தற்போது குஷ்பு திமுக, காங்கிரஸ், பாஜக என மாறி மாறி செல்வது எல்லாம் பதவி என்கிற ஒன்றுக்குத்தான். எனவே  அவருக்கு அந்த பதவி மட்டும் கிடைத்துவிடவே கூடாது என்பது தான் தர்மமாக இருக்கும்.

click me!