வெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி.!

Published : Oct 12, 2020, 07:16 AM IST
வெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி.!

சுருக்கம்

தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதவில்லை. அது வெட்கக்கேடான உண்மை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதவில்லை. அது வெட்கக்கேடான உண்மை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, பின் மருத்துவமனையில் இறந்து போன 19 வயது தலித் பெண் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  ராகுல் காந்தியை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில்.., "தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதவில்லை. அது வெட்கக்கேடான உண்மை. அவர்களுக்காக, முதல்வரும், அவரது காவல் துறையும் யாரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று சொல்கிறது. பல இந்தியர்களுக்கு, அவள் யாரும் (ஒரு பொருட்டு) இல்லை என பதிவு செய்து இருந்தார்.

PREV
click me!

Recommended Stories

TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
Free.! Free! Free: மகளிருக்கு குட் நியூஸ்.! இனி Express, டீலக்ஸ், Mofussil பேருந்துகளிலும் கட்டணம் கிடையாது.! எப்போது முதல் தெரியுமா?