கோத்தா... பய்யா... தமிழ் வாழ்க...!! கஸ்தூரி போட்ட அதிரடி டுவிட்...!!

Published : Nov 19, 2019, 01:28 PM IST
கோத்தா... பய்யா... தமிழ் வாழ்க...!!  கஸ்தூரி போட்ட அதிரடி டுவிட்...!!

சுருக்கம்

இனப்படுகொலையில்  ஈடுபட்ட கோத்தபாய அதிபராக  தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை என பேசி வருகின்றனர்.  இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இணையாக கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, தனது டிவிட்டர் பக்கத்தில் கோத்தபய என்பதற்கு,  கோத்தா... பய்யா...  என்று கெட்ட வார்த்தைபோல குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அதிபராக கோத்தபய  ராஜபக்சே வெற்றி பெற்றுள்ள நிலையில் அது குறித்து நடிகை கஸ்தூரி  தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் அது   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது.  அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை என்ன பட்டது.  தமிழர் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளை பெற்றார்.  

சில மாவட்டங்களில்  அவருக்கு 90 சதவீத வாக்குகளும் கிடைத்தது.  அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கோத்தபய ராஜபக்சவுக்கு அதிக வாக்குகள் விழுந்தன.  பெரும்பான்மையினராக உள்ள சிங்களர்களின் ஆதரவுடன்  பெரும் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே அதிபராக வெற்றி பெற்றுள்ளார் .  இந்நிலையில் புதிய அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு,  இந்திய பிரதமர் மோடி "இணைந்து பணியாற்ற தயார்" என அழைப்பு விடுத்து வாழ்த்து  கூறியுள்ளார்.  சர்வதேச அளவில் உலக தலைவர்களும் கோத்தாவுக்கு,  வாழ்த்து கூறி வருகின்றனர்.  கோத்தபாயவின் வெற்றி தமிழர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒருவர் அந்நாட்டின் அதிபராகி இருப்பது சர்வதேசஅளவில்பல்வேறுவிமர்சனத்தைஎழுப்பிவருகிறது. 

 

இனப்படுகொலையில்  ஈடுபட்ட கோத்தபாய அதிபராக  தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை என பேசி வருகின்றனர்.  இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இணையாக கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, தனது டிவிட்டர் பக்கத்தில் கோத்தபய என்பதற்கு,  கோத்தா... பய்யா...  என்று கெட்ட வார்த்தைபோல குறிப்பிட்டுள்ளார்.   அவர் வெளியிட்டுள்ளார்.  இந்த கருத்திற்கு பலர் எதிர் ரீட்வீட் செய்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!