பல ஆண்களுடன் பழகிய நடிகை சாந்தினி..? டென்ஷனாகி கழற்றிவிட்ட மணிகண்டன்..!

Published : Jun 02, 2021, 11:15 AM IST
பல ஆண்களுடன் பழகிய நடிகை சாந்தினி..? டென்ஷனாகி கழற்றிவிட்ட மணிகண்டன்..!

சுருக்கம்

என்னை பலர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவு ஏன் மலேசிய நாட்டு ராஜாவே என்னை பின் தொடர்கிறார்

நடிகை சாந்தினி அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் சென்றனர். மணிகண்டனின் குடும்பத்தினர், உதவியாளரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீடு பூட்டியிருப்பதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், சாந்தினி அவருக்கு கருக்கலைப்பு செய்த கோபாலாபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் அருணுடன் அவர் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘’நான் ஒன்றும் ரோட்டில் நிற்கும் பெண் கிடையாது. தூதரகத் தொடர்புடன் அரசு பதவியில் இருப்பவர். நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். நான் அவருடன் பேசினால் எனக்கு முறையாக பதில் அளிப்பதே இல்லை. இதனால் சென்னைக்கு வந்து அனைத்து ஆதாரங்களையும் வைத்து முதல்வரிடம் புகார் அளிப்பேன். 

கருக்கலைப்பு செய்த காரணத்தினால் உங்களுடயை பெயரை நான் எந்த வகையில் இழுக்க மாட்டேன். மணிகண்டன் என்னை எத்தனையோ முறை டார்ச்சர் செய்தும் கருக்கலைப்பு செய்தும் நான் அதை யாரிடமும் புகாராக சொன்னதே இல்லை. நான் மலேசியாவில் முக்கிய புள்ளியாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்த பிரச்சினையை நான் முதல்வரிடம் (முன்னாள்) எடுத்துச் செல்ல முடியும்.

மணிகண்டனுக்காக மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை, வேண்டுதல்களை செய்தேன். இதனால் எனது எடை குறைந்தது. ஆனால் நான் பலருடன் தவறாக பழகியதால்தான் எனது உடல் எடை குறைந்ததாக மணிகண்டன் அவதூறாக பேசினார். அமைச்சர் பதவி போக போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவித்தேன். ஆனால் அவர் நம்பவில்லை. மணிகண்டன் யாருக்கும் எந்த உதவியையும் செய்யாத அளவுக்கு மோசமானவர். 

கல்லூரி காலத்தில் நான் மிக பெரிய ரவுடி. நான் மலேசிய தூதுவரான பிறகு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறேன். அமைச்சர் மணிகண்டன் என்னை தொடர்பு கொள்ளாவிட்டால் பரவாயில்லை. என்னை பலர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவு ஏன் மலேசிய நாட்டு ராஜாவே என்னை பின் தொடர்கிறார்’’ என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!