விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நடிகர் விஜய் செல்போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி வேறுபாடு இன்றி பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் சத்தியராஜ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! என தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! pic.twitter.com/DnpQeb20jy
— Thol. Thirumavalavan (@thirumaofficial)சமீபத்தில் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், சினிமாவில் இருப்பவர்கள் பாப்புலாரிட்டி இருந்தால் போதும் உடனே முதல்வராகிவிடலாம் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வருவதாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.