விஜய் அரசியலுக்கு வந்தால் ஒண்ணும் நடக்காது... சீமானை கிண்டலடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!

Published : Aug 31, 2019, 04:58 PM ISTUpdated : Aug 31, 2019, 05:02 PM IST
விஜய் அரசியலுக்கு வந்தால் ஒண்ணும் நடக்காது... சீமானை  கிண்டலடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!

சுருக்கம்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பேசுகையில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சீமான் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஆடை என்பது அவர்களின் தனி மனித உரிமை. முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போடுபவர்கள் ஒரு மனநோயாளிகள். அது ஒரு குளிர் பகுதி. அதற்கேற்ப உடை அணிந்துள்ளார். ஆயிரம் இருந்தாலும் அவர் தமிழகத்தின் முதலமைச்சர். அவர் கோட் சூட் அணிவதை எப்படி இழிவாக பார்க்க முடியும்.  

யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன் என்றார். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்திருந்தார். தற்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே சீமானுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

 

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பேசுகையில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சீமான் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை