ஜெயிலில் சிதம்பரம் ...!! அந்தர் பல்டியடித்த கார்த்தி...!!! பஸ் பாஸ் தவிர, அப்பாவால் எனக்கு எந்த யூஸ்சும் இல்லை...!!

By Asianet TamilFirst Published Aug 31, 2019, 4:27 PM IST
Highlights

என் தந்தையால் ஒரு பலனையும் நான் அடைந்ததில்லை , அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பாராளுமன்றத்தை பார்க்க செல்ல இளவச பஸ் பாஸ் தருவார்கள், அந்த பலனை தவிற வேறெந்த பலனையும் அடைந்ததில்லை என்று கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார். 

என் தந்தை சிறையில் நிம்மதியாக உள்ளார் அவருக்கு அங்கு ஒரு குறையுமில்லை என ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார் தனியார் பத்திரிக்கை ஒன்று அவர் அளித்து பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்தார் என்ற குற்றச்சாட்டில்  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவருக்கு ஜாமின்  வழங்க மறுக்கப்பட்டுள்ள நிலையில்  சிறை காவலில் இருந்துவருகிறார். இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள  கார்த்தி சிதம்பரம் சிறையில் தன் தந்தை நிம்மதியாக உள்ளார், அவருக்கு அங்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் அவரை ஏன் சிறையில் அடைத்துள்ளனர் என்பதுதான்  எனக்கு புரியவில்லை என்றார்.  தொடர்ந்து பேசிய அவர். மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரையும் எங்கள் குடும்பத்தையும் மத்திய பாஜக அரசு அலைகழிக்கிறது, கைது செய்ய சென்ற அன்று, கதவை தட்டியிருந்தால் யாராவது ஒருவர் கதவை திறந்திருப்பார்கள் ஆனால் அப்படி செய்யாமல் காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்து அவரை கைது செய்து பெரிய நாடகத்தையே சிபிஐ நடத்தியதற்கு காரணம் அவரை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிற வேறொன்றும் இல்லை என்றார்.  

திமுக மற்றும் காங்கிரஸ் தலைமைகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது  என்ற  கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர். கைது செய்த அன்று இரவே ராகுல் காந்திக்கு தொலைபேசியில் அழைத்தேன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்துள்ளனர் , உண்மை வெளிச்சத்திற்கு வரும் கவலைப்படாமல்  நம்பிக்கையாக இருங்கள் என்றும் ஆறுதல் கூறினார். என் தந்தை கைது செய்யப்பட்ட உடன் திமுக தலைவர் ஸ்டாலின்  கைதுநடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தொலைபேசியில் அழைத்து ஆதரவாக பேசினார் இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுசரனையாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்கின்றனர் என்றார், 

உங்கள் தந்தையால் நீங்கள் பலனடைந்தீர்கள் என்று உங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதே என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுவரை என் தந்தையால் ஒரு பலனையும் நான் அடைந்ததில்லை , அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பாராளுமன்றத்தை பார்க்க செல்ல இளவச பஸ் பாஸ் தருவார்கள், அந்த பலனை தவிற வேறெந்த பலனையும் அடைந்ததில்லை என்று கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார். 
 

click me!