ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சத்யராஜ்... குஷ்பு சொன்ன அதிரடி பதில்!

Published : Mar 31, 2021, 09:32 PM IST
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சத்யராஜ்... குஷ்பு சொன்ன அதிரடி பதில்!

சுருக்கம்

ஆயிரம் விளக்கு  தொகுதியில்  திமுக வேட்பாளர் எழிலனை நடிகர் சத்யராஜ் ஆதரித்துள்ளது குறித்து நடிகையும் அத்தொகுதி பாஜக வேட்பாளருமான நடிகை குஷ்பு பதிலளித்துள்ளார்.  

ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக வேட்பாளர் குஷ்பு, அந்த பரபரப்புக்கு இடையே செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுக வேட்பாளர் எழிலனை நடிகர் சத்யராஜ் ஆதரித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் குஷ்பு கூறுகையில், “கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரத்தின் படத்தை பயன்படுத்தியது சிறிய தவறு. இதுபோன்ற தவறுகள் பல முறை நடக்கும். புகைப்படத்தை மாற்றிப் போடுவது திமுகவிலும் நடந்துள்ளது. அது பெரிய குற்றமில்லை. நேற்று இரவே நீக்கிவிட்டோம். ஸ்ரீநிதியை நாங்கள் அழகான நடனக் கலைஞராகப் பார்க்கிறோம். பாஜகவா காங்கிரஸா என்று பார்க்கவில்லை. கலை எந்தக் கட்சியையும் சார்ந்தது கிடையாது. கலை பொதுவானது.” என்று குஷ்பு தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்துவதில்லையே என்ற கேள்விக்கு, “ஒரு பக்கமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். எல்லாப் பக்கமும் பார்க்க வேண்டும்.” என்று குஷ்பு கூறினார். இஸ்லாமியர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என அர்ஜூன் சம்பத் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவர் ரஜினியிடம் சென்றுவிட்டு மீண்டும் வரவேயில்லை. அப்போதே அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டோம்.” என்று குஷ்பு தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!