எம்.ஜி.ஆர்,பெரியார் பிறந்த நாளுக்காவது அந்த ஏழு பேரை ரிலீஸ் பண்ணுங்க... சத்யராஜ் உருக்கம்

By vinoth kumarFirst Published Nov 28, 2018, 9:49 AM IST
Highlights

‘ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களை இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் சிறையில் வைத்துக்கொண்டு சித்திரவதை செய்வீர்கள். வரும் டிசம்பர் 24 ம் தேதி, தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்றாவது அவர்களை விடுதலை செய்யவேண்டும்’ என்கிறார் நடிகர் சத்யராஜ்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை ஒட்டி  மேடவாக்கத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் ’மாவீரர் நாள் ‘ கொண்டாடப்பட்டது.  அந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்குக் கல்வி உதவிகளை வழங்கினார். பின்னர் கொஞநேரம் அப்பள்ளி குழந்தைகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்து, அவர்களையும் சிலம்பம் சுழற்றச்சொல்லி கண்டு மகிழ்ந்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களிடம்  பேசிய சத்யராஜ்,’’ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி, பேரரிவாளன் உட்பட்ட 7 பேரும் சிறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டுவிட்டார்கள். தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24-ந்தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து, தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

அந்த முயற்சியை  கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஒரு சாதாரண மனிதனாக எனது உணர்வுகளை இந்த அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்’’ என்று மிக உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.

click me!