நீட் தேர்வை ரத்து செய்ய என்ன செய்யணும் தெரியுமா ?  நடிகர் ராதாரவி கொடுக்கும் ஐடியா !!

First Published Jun 8, 2018, 3:22 PM IST
Highlights
Actor Radha Ravi speech in caddalur abput NEET


தமிழக மாணவ- மாணவிகளை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால்  திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

கடலூர் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின்  95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றுப் பேசிய  நடிகர் ராதாரவி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்  அடுத்த 15 ஆண்டுகளுக்கு யாராலும் அதை அசைக்க முடியாது என தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நாடு, மொழி காப்பாற்றப்படும் என குறிப்பிட்ட அவர் . நடிகர்களை யாரும் நம்பி விடாதீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். ஜல்லிக்கட்டுக்காக மாணவ சமுதாயம் போராடி வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட மாணவர்கள் சினிமாக்காரர்கள் பின்னால் சென்று விடாதீர்கள் என எச்சரித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை நடைபயணம் மேற்கொண்டார். ஆனால் இதை பாஜக  தேசிய செயலாளர் எச்.ராஜா அசிங்கமாக விமர்சனம் செய்தார். அவர்கள் என்னதான் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முயற்சி செய்தாலும் தமிழகத்தில் பாஜகவில்  ஆட்சி செய்ய முடியாது என தெரிவித்தார்..

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்களை தீவிரவாதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார். ஆனால் சினிமாவில் மட்டும் போராட வேண்டும் என்கிறார் இது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பிய ராதாரவி , . நடிகர் ரஜினிகாந்த்தால் அரசியலில் வெற்றி பெற முடியாது என கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்  மத்திய அரசுடன் சேர்ந்து எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் வரும்  தேர்தலில் வெற்றி பெற போவது தி.மு.க. தான் என்றும் முதலமைச்சர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் தான் தகுதியானவர் என்றும் கூறினார்.

உங்க எல்லோருக்கும் ஒரு ரகசியம் சொல்லுகிறேன் கேளுங்க…. நீட் தேர்வு வேண்டாம் என்று நினைக்கிறீர்களா ? அப்போ ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குங்கள் என ராதாரவி தெரிவித்தார்.

click me!