தீரன் பெரிய பாண்டி குடும்பத்துக்கு தீரன் கதாநாயகன் ஆறுதல்..  சாலைப்புதூருக்கு  நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் கார்த்தி !!! 

Asianet News Tamil  
Published : Dec 15, 2017, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
தீரன் பெரிய பாண்டி குடும்பத்துக்கு தீரன் கதாநாயகன் ஆறுதல்..  சாலைப்புதூருக்கு  நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் கார்த்தி !!! 

சுருக்கம்

actor karthi paid homage to peria pandi

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியில் குடும்பத்தினரை, அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சாலைப்புத்தூர், மூவிருந்தாளி கிராமத்துக்கு சென்று நேரில் சந்தித்து நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார்.

நடிகர் கார்த்தி நடித்து அண்மையில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதோடுமட்டும்ல்லாமல், பொது மக்கள், காவல் துறையினரிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

2005ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பெரியபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் வெறும் காலணி, கைரேகை, ஒரு தோட்டா மட்டுமே போலிசாருக்கு ஆதாரமாக கிடைத்தது. இதையடுத்து அப்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 



வடமாநிலத்தவர்தான் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டுமென உறுதி செய்து கொண்ட ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை, பல்வேறு விசாரணைக்குப் பிறகு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பவாரியா கொள்ளையர்கள் தான் என கண்டுபிடித்தது. பின்னர் அந்த தனிப்படை பல்வேறு சிரமங்களுக்கு இடையே ராஜஸ்தான் சென்று கொள்ளையர்களை கைது செய்தது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான தீரன் அதிகாரிம் ஒன்று.

இதே போன்று சென்னை கொள்த்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி மதுரவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்களை பிடிக்க முய்ன்றபோது பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெரிய பாண்டியனின் வீரதீச் செயல் தமிழக மக்களை நெகிழச் செய்ததோடு மட்டுமல்லாமல் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொல்லப்பட்ட பெரிய பாண்டியின் உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சாலைப்புத்தூர் மூவிருந்தாளி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பெரியபாண்டியன் குடும்பத்தினருக்கு தீரன் பட கதாநாயகன் நடிகர் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி கிராமத்துக்கு சென்ற நடிகர் கார்த்தி கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் மனைவி பானு ரேகா, மகன்கள் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து பெரிய பாண்டியனின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..அலறும் அறிவாலயம்!
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!