
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், விபத்துக்குள்ளான பெண்ணை மீட்டு உடனடியாக தனது வாகனத்தில், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
கள பணியில் ஈடுபட்டு வரும் கமல் ஹாசன் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டார். மக்கள் நீதி மய்யம் தொடங்கியபின், பம்பரம் போன்று தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் கஷ்ட நஷ்டங்களை பற்றி விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் விபத்துக்கு உள்ளானர்.
இதனை கண்ட கமல், உடனடியாக காரில் இருந்து இறங்கி அவரை மீட்டு, தன்னுடைய காரிலேயே மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மீனவர்களுக்கு படகு மீட்புக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
மேலும் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.