
1966-இல் வாஜ்பாய் ஆட்சி அமைத்ததாக தவறான பதிவை டுவிட்டரில் போட்ட ஹெச்.ராஜாவை கண்டமேனிக்கு வெச்சு செய்து வருகின்றனர் வலைதலவாசிகள்.
கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரு வதைப்போல பாஜகவும் 104 இடங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மை என சொல்லிக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு சென்று ஸ்கூல் பிள்ளைகள் மாதிரி அடம்பிடித்து வருகிறார் எடியுரப்பா.
ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற கட்சிகளுடன் கைகோத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்றியது. இப்படி இருக்கையில், எடியுரப்பாவே இப்படி பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்கக் கூடாது என பிஜேபி பார்முலாவை கையாளும் காங்கிரஸை குறை கூறும் நேரத்தில், தேசிய செயலாலரான ஹெச் ராஜாவோ தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக தேர்தல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், காங்கிரஸ் ஆதரவுடன் அமைக்கப்படும் எந்த அரசும் நிலையான (stable) அரசாக இருந்ததில்லை. உதாரணம் சரண் சிங் மற்றும் தேவ கௌடா தலைமையிலான அரசுகள். எனவே கர்நாடகாவில் அரசியல் ஸ்திரத்தன்மை தேவை என்றால் காங்கிரஸை ஒதுக்கியே யோசிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து போட்ட பதிவில், 1966 ல் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் வாஜ்பாய் அவர்களை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தது போல் கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான் தலைவர் BSY அவர்கள் ஆட்சி் அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நிலை என ஒரு பதிவைப் போட்டார். பாவம் ரொம்பநாளாக சிக்காமல் இருந்த ஹெச்.ராஜா கலாய்க்க ஸ்டார்ட் பண்ணி விட்டனர். ஆனால் நெட்டிசங்களுக்கு சமாளிப்பதர்க்காகவே ஒரு பதிலை வைத்துள்ளார். அதாங்க “அது நான் இல்லைங்கோ நம்ம அட்மின் போட்டது”ன்னு எஸ்கேப் ஆகிடுவாறேன்னு வெச்சு செய்து வருகின்றனர்.
அட்மின் மூதேவி அது1966 இல்லை 1996 .மேலும் அன்று வாஜ்பாய்க்கு அழைப்பு விடுத்தபோது அவரை காட்டிலும் அதிக எண்ணிக்கையை யாரும் காட்டி உரிமை கோரவில்லை அதனால் வாஜ்பாய் அழைக்கப்பட்டார் இன்றோ.104யைவிட 118 என்ற பெரிய ஆதரவு காட்டி உரிமைகோரியுள்ளார் குமாரசாமி சட்டபடி.118 யைதான் அழைக்கனும் என காமராஜ் பதிவிட்டுள்ளார்.
அது எப்படி உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா மொதல்ல நீ எதுக்கு எல்லாரையும் ப்ளாக் பண்ற? என போட்டோ போட்டு கலைத்துள்ளார்.