
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதையடுத்து குமாரசாமி முதல்வராவதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் நேற்று மாலையே ஆளுநரைச் சந்தித்த பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எங்களுக்கு அனுமதியளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்ட நன்றி சொல்லும் அறிக்கையானது உண்மையை மொத்தமாக மூடி மறைப்பதாக அமைந்திருந்தது. அதாவது கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி என்பதைப் போலவும், அது நிகரில்லாத வெற்றி என்றும் “தனிப்பெருங்கட்சியாக வளர்ச்சியடைய வாக்காளர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி” என மோடி அலப்பறை செய்திருந்தார். அதாவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் என சமூகவளைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான வாக்குகளில் 36.2 சதவீதத்தைதான் பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரசுக்கு 37.9 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதுபோக, மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 18.5 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்த்து 56.4 சதவீதம் வாக்குகளுடன் 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதை பொய்யாக்கும் விதமாக அவரது அறிக்கை வெளியாகியிருந்தது.
இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா? பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் 29 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருக்கிறது. அதிலும் 12 தொகுதிகளில் தமிழ்நாட்டைப் போல நோட்டாவுக்கு கீழாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் வெற்றிபெற்ற இடங்களில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. தோற்ற இடங்களில் மிகக்குறைவான வாக்குகளில் தோற்றிருக்கிறது. இதை facebook twitter, whatsapp போன்ற சமுக வலைத்தளங்கள் உலாவும் காலத்தில் அது மறைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. பா.ஜ.க. டெபாசிட் இழந்த தொகுதிகளும் வாக்குகளும் இதோ..
உண்மை இப்படி இருக்க, கர்நாடகாவில் மக்கள் இரண்டு கட்சிகளையும் நிராகரித்துவிட்டதாகவும், பாஜகதான் வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்திருப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கோவா, மேகாலயா போன்ற பிற மாநிலங்களில் வேகமாக இருந்த பாஜகவை இம்முறை காங்கிரஸ் முந்திவிட்டது. சுயேச்சைகள் அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலாவது ஆபரேஷன் சக்சஸ் ஆகியிருக்கும். இப்படி கிடைத்த வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டு காங்கிரஸை போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறது. பிஜேபி எதிர்பாராத வகையில் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததை அந்தக் கட்சியால் யூகிக்கக்கூட முடியாமல் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்திற்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி, எம்எல்ஏக்களை விலைபேச பிஜேபி முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
ஆனால், குமாரசாமியை சந்தித்து பிஜேபியை ஆதரிக்க வேண்டும் என்று கூச்சமில்லாமல் கேட்டிருக்கிறார் ஜவடேகர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், நிமிடத்துக்கு நிமிடம் பேச்சை மாற்றிப் பேசி, எப்படியாவது ஆளுநரைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பிஜேபி தீவிரமாக முயற்சிக்கிறது. மேலும் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை தங்களது பக்கம் இழுக்கத்தொடங்கியுள்ளது. இதற்க்கு முன்பு சில மிரட்டல்களை குமாரசாமிக்கு கொடுக்க, உங்கள் வேலையை என்னிடம் காட்ட வேண்டாம். இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என மோடி அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் குமாரசாமி.