
மக்கள் விரும்பினால் அரசியல் பேசத் தயார் எனவும் அரசியலுக்கு வந்த பின் ரஜினியுடன் பேச த் தயார் எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த கமல் தற்போது அரசியலில் இறங்குவது போன்று தீவிரமாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
அரசியலுக்கு வராமல் விமர்சித்து வந்த கமலை அதிமுக அமைச்ச்ரகள் சூடேற்றி அரசியலுக்கு வந்துவிட்டேன் என சொல்ல வைத்தனர்.
அதைதொடர்ந்து ஓணம் பண்டிகைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த கமல், அரசியல் கற்றுக்கொள்ளவே இங்கு வந்தேன் என தெரிவித்தார்.
இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் பற்றி பேசி வந்த கமல் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடிகர் கமலஹாசன் பேசினார்.
அப்போது, மக்கள் விரும்பினால் அரசியல் பேசத் தயார் எனவும் அரசியலுக்கு வந்த பின் ரஜினியுடன் பேச த் தயார் எனவும் தெரிவித்தார்.
ரஜினி விரும்பினால் அணியில் இணைத்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன எனவும் குறிப்பிட்டார்.
அறவழியில் போராடுவது ஆரம்பம் எனவும் அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம் எனவும் பேசினார்.
நான் தொழிலுக்காக நடிக்கிறேன் எனவும் சிலர் பதவிக்காக நடிக்கின்றனர் எனவும் விமர்சித்தார்.