டிடிவி மீண்டும் ஜெயிலுக்கு செல்வார் - எடப்பாடி ஓபன் ஸ்டேட்மெண்ட்...

Asianet News Tamil  
Published : Sep 15, 2017, 09:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
டிடிவி மீண்டும் ஜெயிலுக்கு செல்வார் - எடப்பாடி ஓபன் ஸ்டேட்மெண்ட்...

சுருக்கம்

Chief Minister Ettappi Palanisamy said that the conspiracy to overthrow the regime would not help and the DVV would return to jail again.

ஆட்சியை கவிழ்க்க நடைபெறும் சதி பலிக்காது எனவும் டிடிவி மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பத்து மாசம் வனவாசம் போனவர் டிடிவி எனவும், ஒரே நாளில் மளமளவென தேர்ந்தெடுக்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக அமர்ந்த கூத்து இங்கேதான் நடக்கும் எனவும் விமர்சித்தார். 

இது எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் காக்கப்பட்ட கட்சி எனவும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது எனவும் தெரிவித்தார். 

நாங்களே கட்சிக்காக கஷ்டப்பட்டோம் எனவும், 9 முறை யாருடைய சிபாரிசும் இல்லாமல் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பாளராக நின்றேன் எனவும் குறிப்பிட்டார். 

மேலும், எனக்காக ஓட்டு கேட்டியா? சிபாரிசு செஞ்சியா ? ஏன் உரிமை கொண்டாடுகிறாய் என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார். 

ஆட்சியை கவிழ்க்க நடைபெறும் சதி பலிக்காது எனவும் டிடிவி மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!