பெற்ற தந்தையே நம்பவில்லை - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி...

 
Published : Sep 15, 2017, 09:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
பெற்ற தந்தையே நம்பவில்லை - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி...

சுருக்கம்

Chief Minister Edappadi Palanisamy said that Karunanidhi was the leader of the 96th and his father did not trust the stalin.

தமது 96 வயதில் கருணாநிதி தலைவராக உள்ளார் எனவும், பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என மத்திய அரசை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது எனவும், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தான் போதுமான நிதி கிடைத்து வருகிறது எனவும் தெரிவித்தார். 

பெற்ற தந்தையே உங்களை நம்பி கட்சியின் தலைவர்  பதவியை தராதபோது மக்கள் எப்படி நம்புவார்கள் என கேள்வி எழுப்பினார். 

திமுக காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும், திமுக பதவி வெறி பிடித்த கூட்டம் எனவும் விளாசினார். 

காங்கிரஸும் திமுகவும் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் கொண்டு வரப்பட்டது எனவும், ஆட்சியையும் கட்சியையும் அகற்ற சிலர் துடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையிலேயே தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது எனவும் மைனாரிட்டி ஆட்சி நடத்திய ஸ்டாலினுக்கு அதிமுக ஆட்சியை பற்றி விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். 

 

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!