வீட்டை மருத்துவமனையாக மாற்ற கமல் முடிவு... கொரோனா பரவலால் அரசின் அனுமதி கோரும் கமல்!

By Asianet TamilFirst Published Mar 25, 2020, 8:23 PM IST
Highlights

வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. என்றபோதிலும் கொரோனா பாதிப்பு தீவிரமானால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுவெளியில் வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தனது வீட்டை தற்காலிகமாக மருத்துவ மய்யமாக மாற்ற தயார் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
 
மக்கள் நீதி மய்யத்தில் உள்ள மருத்துவர்களையும் என்னுடைய வீட்டையும் தற்காலிகமாக மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவத் தயார் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. தற்போது வரையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் 600-ஐ தாண்டியுள்ளது. மொத்தமாக இந்தியாவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. என்றபோதிலும் கொரோனா பாதிப்பு தீவிரமானால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுவெளியில் வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தனது வீட்டை தற்காலிகமாக மருத்துவ மய்யமாக மாற்ற தயார் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள பதிவில், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

click me!