நடிகரும் அதிமுக பிரபல வழக்கறிஞருமான துரைப்பாண்டியன் மரணம்.! சோகத்தில் உடன்பிறப்புகள்.

By T BalamurukanFirst Published Sep 9, 2020, 10:06 AM IST
Highlights

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகரும், அதிமுக பிரமுகருமான துரைப்பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.


பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகரும், அதிமுக பிரமுகருமான துரைப்பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.

துரைப்பாண்டியன் நாள்பட்ட நுரையீரல் பிரச்னை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி என குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் மரணம் அடைந்தார். கொரோனா தொற்றோ அல்லது வேறு காரணங்களோ இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி நடித்து பிரபலமான துரைப்பாண்டியன் மேலும் பல படங்களில் நடித்துள்ளார். குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். துரைப்பாண்டியன் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் இருந்துவந்துள்ளார்.

click me!