டூவீலர் கடைக்கு மின்சாரக்கட்டணம் சுமார் 4கோடி ரூபாயாம்.! கேட்டாலே சாக்கடிக்குது..!என்ன நடந்தது.!

Published : Sep 09, 2020, 09:34 AM IST
டூவீலர் கடைக்கு மின்சாரக்கட்டணம் சுமார் 4கோடி ரூபாயாம்.! கேட்டாலே சாக்கடிக்குது..!என்ன நடந்தது.!

சுருக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் டூவீலர் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு 3.71 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

டூவீலர் பஞ்சர் பார்க்கும் கடைக்கு மின்கட்டணம் 3.71கோடி கணக்கிடப்பட்ட விவகாரம் இந்தியாவை தலைசுற்ற வைத்திருக்கிறது.இந்த மின்கட்டணம் தொகையை கேட்டு அந்த கடைக்காரர் பதறிப்போய் மின்சாரவாரியத்திற்கு நேரில் சென்று மின் கணக்கை சரிபார்த்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டாராம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் டூவீலர் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு 3.71 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றை வாலிபர் ஒருவர் வாடகைக்கு எடுத்து டூவீலர் பழுது பார்க்கும் பணியை செய்து வந்தார். அவருக்கு சராசரியாக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின் கட்டணம் என்பது வருமாம்.

இந்த நிலையில் திடீரென இந்த மாதம் அவருக்கு 3 கோடியே 71 லட்சம் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் அதனை உடனடியாக செலுத்த வேண்டுமென்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஓனர் விவசாயி மற்றும் டூவீலர் பழுது பார்க்கும் கடை வைத்துள்ள வாலிபர் ஆகிய இருவரும் மின்சார வாரிய அலுவலகம் செய்திருக்கிறார்கள்.அங்கு சென்று அவருடைய மின்கணக்கை சோதனை செய்தபோது மின் கணக்கீட்டாளர் செய்த தவறால் அதிக மின்கட்டணம் பதிவு செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. அதன் பின் அவரிடம் 6,400 ரூபாய் மட்டும் மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணமாக பெற்றுக்கொண்டனர்.டூவீலர் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு 3.71 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 

PREV
click me!

Recommended Stories

கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
திமுக கோட்டையில் ஓட்டை போடுவாரா விஜய்? தளபதியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அந்த ஒரு தொகுதி!