திமுக வரலாற்றில் முதன் முறை... இணையத்தில் கூடும் பொதுக்குழு.. மூத்தவர்களுக்காக புதிய பதவிகள் உருவாக்கப்படுமா.?

By Asianet TamilFirst Published Sep 9, 2020, 8:37 AM IST
Highlights

திமுகவின் வரலாற்றில் முதன் முறையாக இணையதளம் மூலம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

திமுகவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளார்கள். திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம் திமுகவினரால் நிரம்பி வழியும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றால், அண்ணா சாலையே ஸ்தம்பிக்கும்.  ஆனால், கொரோனாவின் தாக்கத்தால் முதன் முறையாக இன்று ஆன்லைன் மூலம் திமுக பொதுக்குழு நடக்க உள்ளது. இன்று நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 75 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று கூட உள்ள பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலுவை முறைப்படி தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தடுப்பதற்கான தேர்தலில் இவர்கள் இருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். எனவே இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது உறுதியானது. ஆனால், இதற்கு பொதுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதால், இன்றைய பொதுக்குழு கூட்டம் அதைச் சுற்றியே இருக்கும். மேலும் வழக்கமாக பொதுக்குழுவில் முன்னணி தலைவர்கள் சிலர் பேச அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இன்று குறைந்த எண்ணிக்கையில் தலைவர்கள் பேச அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

 
பதவி கிடைக்காத வருத்தத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதால், கூடுதலாகப் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பொன்முடி, ஆ,ராசா, எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிய பதவிகள் ஏதேனும் வழகங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 

click me!