அடி தூள்.. முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.. இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி.

By Ezhilarasan BabuFirst Published Jul 19, 2021, 10:39 AM IST
Highlights

வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மேலும் சில தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். 

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமாக குறைந்து வரும் நிலையில்,  50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை இயக்க கர்நாடக அரசு  அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா வைரஸ்  இரண்டாவது அலை கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது, முதல் அலையை காட்டிலும் 2வது அலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இந்த வைரஸ் தொற்றின் பரவல் மிக தீவிரமாக இருந்தது, குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அங்கு ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது, பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது தினசரி பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதே போல் இறப்பு எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து, பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மேலும் சில தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். அதனடிப்படையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வரை நீடிப்பது என்றும் திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 50% பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க உள்ளது. அதேபோல் வைரஸ் தொற்று குறைந்து வருவதன் எதிரொலியாக வரும் 26ஆம் தேதி முதல் கல்லூரிகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!